இது சிறுத்தைகளின் களம்


You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் 3பேர் பலி: நீதி விசாரணை நடத்தவேண்டும்! - எழுச்சித்தமிழர் அறிக்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் பயின்ற வடஇந்திய மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த வட இந்திய மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனை அலுவலகத்தைத் தாக்கியுள்ளனர். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் அம்மாணவர்களை அப்புறப்படுத்துகிறோம் என்ற பெயரில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் அலறி அடித்துக்கொண்டு தப்பிஓட முயன்ற மாணவர்கள் அருகில் உள்ள ஓடையில் விழுந்து மூழ்கி மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் நிலை என்னவென்பதும் இன்னும் உறுதிப்படவில்லை. காவல்துறையின் கட்டுப்பாடிழந்த போக்கால் இந்த அளவில் உயிர்ச்சேதம் நிகழ்ந்துள்ளது. அம்மாணவர்கள் வட இந்தியர்கள் என்பதனால் இந்த அவலத்தை கண்டுகொள்ளாமல் புறந்தள்ளிவிட முடியாது.நிர்வாகத் திறனிழந்த பல்கலைக் கழகத்தின் அலட்சியப் போக்கும் காவல்துறை யின் மூர்க்கத்தனமும் இந்தப் படுகொலைகளுக்குக் காரணமாகும். எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் இதற்குப் பொறுப்பேற்று கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும். மேலும், தனியார் கல்வி நிறுவனங்களில் தமிழகம் அல்லாத பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து சேரவிரும்பும் மாணவர்களில் சுமார் 5 விழுக்காடு அளவே மாணவர் சேர்க்கையின்போது அனுமதிக்கவேண்டும். இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் வட இந்திய மற்றும் பிற நாடுகளைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டால், வட மாநிலங்களிலும் பிற மாநிலங்களிலும் பயில்கிற மாணவர்களும் வெகுவாக பாதிக்கப்படுவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறையின் அத்துமீறலால் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

மார்ச் 5ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரி
சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ‍ எழுச்சித்தமிழர் அறிக்கை

இந்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, தலித் மக்கள் மிகவும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்துக் குரல் எழுப்பி வருகின்றனர். அதேவேளையில் ஆளும் கட்சிக் கூட்டணியிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகளும் இந்த விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு அதனை முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 5/03/2010

காலை 11 மணி அளவில் சென்னை, அரசு பொது மருத்துவமனை எதிரில் எனது தலைமையில் விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும், பொதுமக்களும் வெகுவாகப் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுவிக்கிறோம்.

இவண்

(தொல். திருமாவளவன்)

இந்தியப் பொது பட்ஜெட் ஏமாற்றத்தைத் தருகிறது- எழுச்சித்தமிழர் அறிக்கை

இந்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் 5 சதவிகித வட்டியில் விவசாயிகள் கடனுதவி பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரவேற்கத்தகுந்ததும் பாராட்டுக்குரியதுமாகும்.

மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படி பாராட்டுக்குரிய அம்சம் ஏதுமில்லை என்பது ஏமாற்றத்தைத் தருகிறது.

அத்துடன் தலித் மக்களின் மேம்பாட்டுக்கும், ஈழத் தமிழரின் மறுவாழ்வுக்கும் உரிய அறிவிப்புகள் இல்லாதது வேதனையளிக்கிறது. இந்திய இராணுவச் செலவுகளுக்கென சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பள்ளி, கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சமூக வளர்ச்சித் திட்டங்களைவிட இந்தியப் பாதுகாப்பு எனும் பெயரில் செலவுத் திட்டமே மிகுதியாக உள்ளதை அறியமுடிகிறது. இதுவும் தேசத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் சாதாரண ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வற்புறுத்துகிறோம்.

இவண்

தொல். திருமாவளவன்

ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் தமிழக முதல்வர் கலைஞருக்கு "அம்பேத்கர் சுடர்' விருது

தொல். திருமாவளவன் அறிவிப்பு

தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களை 19Š02Š2010 மாலை 5 மணியளவில் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தோம். "தாட்கோ' மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ததற்காகவும், ஏழை எளிய மக்கள் பயன்படக்கூடிய வகையில் "கலைஞர் வீட்டுவசதித் திட்டம்' என்கிற பெயரில் 21 லட்சம் காரை வீடுகள் கட்டுவதற்கான அறிவிப்புச் செய்ததற்கும், அரசுப் புறம்போக்கு நிலத்தில் மூன்றாண்டுகளாகக் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட ஆணை பிறப்பித்ததற்காகவும், மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். அத்துடன் காவல்துறையின் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான வயது வரம்பை 33லிருந்து 35ஆகத் தளத்திட வேண்டும் என்றும், ஐ.ஐ.டி. போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் மாணவர்களுக்கென "முன்பயிற்சித் திட்டத்தை' தாட்கோ மூலம் நடத்திட வேண்டுமெனவும், கிராம உதவியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்களில் மிச்சமுள்ள 60 பேருக்கு வயது வரம்பைத் தளர்த்தி வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விமர்சனம் செய்துள்ளதை பொருட்படுத்தாமல் உள்ஒதுக்கீட்டைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம்.

தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்திவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாராட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 2010ஆம் ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்' விருதினை வழங்குவதெனும் எமது முடிவுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மகிழ்வுடன் இசைவளித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளின் போது "அம்பேத்கர் சுடர்', "பெரியார் ஒளி', "அயோத்திதாசர் ஆதவன்', "காயிதேமில்லத் பிறை', "காமராசர் கதிர்', "செம்மொழி ஞாயிறு' என்னும் விருதுகளைப் பொற்கிழியுடன் சமூக நலத்தொண்டர்களுக்கு வழங்கி வருகிறோம். இத்தகைய விருதுகளில் அம்பேத்கர் சுடர் விருதினை இந்த ஆண்டு மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வழங்குவதில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமிதம் கொள்கிறோம்.

ஏப்ரல் 14ஆம் நாள் சென்னையில் நடைபெறவுள்ள மகத்தான பெருவிழாவில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மற்ற விருதுகள் பெறுவோர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

இவண்

(தொல். திருமாவளவன்)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகமெங்கும் "முத்துக்குமார் பாசறை' தொடங்கப்படும்!-முத்துக்குமார் குடும்பத்திற்கு நிதியளித்த நிகழ்வில் எழுச்சித்தமிழர் அறிவிப்பு


விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், கரும்புலி முத்துக்குமார் நினைவு நாளான சனவரி 29ஆம் நாளை "தமிழகக் கரும்புலிகள் நாள் என்று அறிவித்துள்ளதோடு, "கரும்புலி முத்துக்குமார் பாசறை'யையும் தொடங்கியுள்ளார்

இது குறித்த விவரம் வருமாறு :-

இன்று 13Š.02.Š2010 காலை 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கொளத்தூரிலுள்ள வணிகர் சங்கக் கட்டடத்தில் கரும்புலி முத்துக்குமார் குடும்பத்தினரைச் சந்தித்தார். அப்போது அக்குடும்பத்தின் பாதுகாப்பு நிதியாக ரூ. 2 லட்சத்தை முத்துக்குமாரின் சகோதரி தமிழரசியிடம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசும்போது, ""ஒவ்வோர் ஆண்டும் முத்துக்குமாரின் நினைவு நாளான சனவரி 29ஆம் நாளை "தமிழகக் கரும்புலிகள் நாளாக' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழுச்சியுடன் கடைப்பிடிக்கும். அத்துடன் கரும்புலி முத்துக்குமாருடைய தமிழீழ விடுதலைக்கான அர்ப்பணிப்பை தமிழகத்தில் பரப்பும் வகையில் "கரும்புலி முத்துக்குமார் பாசறை' என்ற அமைப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடங்குகிறோம். இந்த அமைப்பு தமிழ்நாடு முழுக்க முத்துக்குமாருடைய கொள்கைகளைப் பரப்பும். கரும்புலி முத்துக்குமாரைத் தொடர்ந்து வீரச்சாவடைந்த தமிழகக் கரும்புலிகள் அனைவரின் குடும்பத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக பாதுகாப்பு நிதி வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.

கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? கருத்துத் திணிப்பு வன்முறையாளர்களுக்கு பதிலடி!

""உயரிய நோக்கத்திற்காக பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை துரோகிகளும் எதிரிகளும் திசைமாற்ற நினைப்பார்கள். அவற்றையயல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இலக்கை அடைய முடியும்!''
மேதகு பிரபாகரனின் இந்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் பயணித்துக்கொண்டிருக்கிறது. சாதியற்ற தமிழ்த்தேசம் படைக்க தமிழ்நாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகளாய் களமாடிக் கொண்டிருக்கிறோம்.

காலம் காலமாய் கட்டிக்காத்து வந்த சாதியவாதிகளின் ஆதிக்கத்தை உடைத்து ஒடுக்கப்பட்ட அனைவரையும் அரசியல் அதிகாரத்தின் அருகில் அழைத்து வந்துகொண்டிருக்கிறார் "எழுச்சித்தமிழர்' தொல். திருமாவளவன் அவர்கள். அதேபோல் தமிழ், தமிழ்த்தேசியம், மேதகு பிரபாகரன் என்கிற விடுதலைச் சொற்கள் சேரிகளிலும் குப்பங்களிலும் இன்றைக்கு உச்சரிக்கப்படுகிறதென்றால் அதற்குக் காரணம் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்தான்.

இன்றைக்கு தமிழ்த்தேசிய எழுச்சி தமிழகத்தில் நெருப்பாய் அனலடிக்கிறது என்றால் அதற்குக் காரணமாகநேர்மையான தமிழ்த்தேசியவாதிகளின் விரல் விடுதலைச் சிறுத்தைகளைத்தான் சுட்டிக்காட்டும். அந்தளவிற்கு திராவிட அரசியலுக்கு மாற்றான ஆற்றலாய் வளர்ந்து வருகிற விடுதலைச் சிறுத்தைகளின் களப்பணிகள் வெகுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிற சூழலில், விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சியை வளர்ச்சியைப் பிடிக்காத சில "நச்சுவாதிகள்' சிறுத்தைகளுக்கெதிராக அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

ஈழத் தமிழர்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்துவிட்டதாக அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றனர்.

ஈழ விடுதலை அரசியலில் கடந்த கால் நூற்றாண்டாய் களமாடி வருபவர் எழுச்சித் தமிழர். தேசிய இன விடுதலை குறித்த, மார்க்சிய, பெரியாரிய, கருத்தியலோடு தமிழகத்தில், இந்திய அளவிலேயே உருவான முதல் அம்பேத்கர் இயக்கம் என்றால் அது விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். அம்பேத்கர் இயக்கமென்றால், தமிழகத்தில் திராவிட பொதுவுடைமைக் கட்சிகளுக்கு கொடிகட்டவும், போஸ்டர் ஒட்டவும், கூட்டம் சேர்க்கவும்தான் என்கிற நிலையை மாற்றி "அதிகாரப் பகிர்வு' என்கிற அளவில் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான்.

தலித்துகளும் தமிழர்கள்தான் என்று பொதுஅரங்கில் தலைநிமிர்வை உருவாக்கியவர் எழுச்சித்தமிழர்தான். இதைப் பொறுக்க முடியாத தமிழ்த் தேசிய முலாம் பூசிக்கொண்டு திரியும் சாதியவாதிகள் ஆற்றாமையால் வாய்க்கு வந்ததைப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது, "மீனகம்' என்கிற இணையத் தளத்தில் இராவணன் என்கிற பெயரில் ஒளிந்துகொண்டிருக்கும் மக்கள் விரோதி, கீழ்க்கண்ட அவதூறுகளை கூச்சநாச்சமில்லாமல் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

1. முத்துக்குமார் மூலம் தமிழகத்தில் எழவிருந்த எழுச்சியை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தடுத்துவிட்டார்.
2. தி.மு.க.வின் தலைவர் சொல்லித்தான் இப்படிச் செய்துவிட்டார்.
3. முத்துக்குமாரின் உடலை அவரது சொந்த ஊரான கொழுவை நல்லூருக்குப் போகவிடாமல் திருமாவளவன் தடுத்துவிட்டார்.
4. புரசைவாக்கம் கடைவீதி வழியாகச் செல்லத் தடை விதித்தார்.
5. கல்லூரிகளும் விடுதிகளும் காலவரையற்ற வகையில் மூட தி.மு.க. அரசு உத்தரவிட்ட நிலையில் மாணவர்கள் முத்துக்குமார் உடலை ரோட்டில் போட்டு மறியல் செய்தபோது வன்னி அரசு மூலம் ரவுடித்தனம் செய்து உடலை அடக்கம் செய்தது.

இப்படிப் போகிறது அந்த நபரின் அவதூறு குற்றச்சாட்டுகள். இதற்குப் பதில் கூறும் முகமாக இக்கட்டுரையை எழுதவில்லை. முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து சனவரி 29 வியாழன் காலை முதல் சனவரி 31 சனி நள்ளிரவில் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரியூட்டப்படும் வரை உடனிருந்தவன் என்கிற முறையில், நடந்தது என்ன என்பதைச் சொல்லும் விதமாகத்தான் எழுதுகிறேன். அதுமட்டுமல்ல, முத்துக்குமார் எனது நண்பர். விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல்தான் தமிழர் விடுதலைக்கான அரசியல் என்று முழுமையாக நம்பியவர். இக்கருத்தை அநேகமுறை என்னிடம் கூறியவர். எழுச்சித் தமிழர் மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டத்தில் நான்கு நாட்களும் மறைமலைநகர் திடலில், ""அண்ணன் ஏன் சாகவேண்டும்? நான் சாகிறேன்'' என்று கூறிக்கொண்டு மிகுந்த மனஉளைச்சலில் இருந்தவர்.

சாகும் தறுவாயில், ""பிரபாகரனிடமும் திருமாவளவனிடமும் என் சாவைச் சொல்லுங்கள்!'' என்று சொல்லிச் செத்தவர்.

அத்தகைய முத்துக்குமார் சாவின் மூலம் எழவிருந்த எழுச்சியை எழுச்சித் தமிழர் தடுத்தார் என்று சொல்வது, வேடிக்கையிலும் வேடிக்கை. இது முத்துக்குமாரின் ஈகத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.

கரும்புலி முத்துக்குமாரின் உடலை எங்கு வைக்க வேண்டும் என்பதை முழுக்க முழுக்க முடிவு செய்தது இயக்குநர் புகழேந்திதான். வணிகர் சங்கத் தலைவர் திரு. த. வெள்ளையன் அவர்களின் வழிகாட்டுதல்படி தோழர் புகழேந்திதான் இதை நெறிப்படுத்தினார். மருத்துவமனையில் தோழர் புகழேந்தியுடன் முழுக்க முழுக்க நான் இருந்தேன். அப்போது காவல்துறையின் உதவி ஆணையர் திரு. சாரங்கன் "முத்துக்குமாரை தமிழ்த் தீவிரவாதி' என்று சொன்னபோது காவல்துறையை எதிர்த்துக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது விடுதலைச் சிறுத்தைகள்தான். அதன்பின் ம.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. ஜோயல் அவர்களின் தலைமையில் வழக்கறிஞர்கள் வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பின்னர் முத்துக்குமாரின் வித்துடல் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்டு கொளத்தூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மறுநாள் காலை 10 மணிக்கு கொளத்தூரில் உள்ள வணிகர் சங்கக் கட்டடத்தில் தலைவர்கள் வைகோ, பழ.நெடுமாறன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு, இராமதாசு, எழுச்சித் தமிழர், த. வெள்ளையன் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.
அப்போது வெள்ளையன் அவர்கள், முத்துக்குமாரின் வித்துடலை கொழுவைநல்லூருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், அன்றைய கொந்தளிப்பான சூழலைக் கணக்கிட்டு, அதனை வேண்டாம் என்று வாதிட்டவர் மருத்துவர் இராமதாசு அவர்களும், தா. பாண்டியன் அவர்களும்தான்.

இறுதியில் மூத்த அரசியல் தலைவர்களின் கருத்துகளே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அண்ணன் வெள்ளையன் எவ்வளவோ கெஞ்சியும் அவரது குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. அடுத்து சென்னையில் எங்கு எரியூட்டுவது என்கிற விவாதம் எழுந்தபோது, கொளத்தூரில் உள்ள சுடுகாட்டில்தான் எரியூட்ட வேண்டும் என்று சொன்னவர்கள் அதே மூத்த அரசியல் தலைவர்கள்தான். ஆனால் எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர்தான், ""முத்துக்குமார் உடலை மூலக்கொத்தளத்தில்தான் எரியூட்ட வேண்டும். அங்குதான் மொழிப்போர் ஈகியர் நினைவிடம் இருக்கிறது. ஆகவே, முத்துக்குமாரின் வித்துடல் அங்கு எரியூட்டப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும்'' என்று அக்கூட்டத்தில் பேசினார். ஆனால் மருத்துவர் இராமதாசு அவர்கள், ""கொளத்தூரிலிருந்து மூலக்கொத்தளம் சுடுகாட்டின் தொலைவு அதிகமாக இருக்கிறது. கலவரம் எதுவும் வரலாம்'' என்று அச்சமூட்டினார்.

அதற்கு அண்ணன் வெள்ளையன் அவர்கள், ""கொழுவைநல்லூருக்குத்தான் கொண்டு போகவில்லை. மூலக்கொத்தளத்திற்காவது போவோம்'' என்று உருக்கமாக வேண்டினார்.

இறுதியில் மூலக்கொத்தளம் என்றே முடிவானது. சனி மாலை முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம்! அனைத்துத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இடையிடையே அந்த கொளத்தூர் சாலையில் பிரச்சனைகள் வந்தவண்ணம் இருந்தன.

திடீரென பிற்பகல் 3 மணியளவில் சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்க முயற்சிப்பதாக என்னிடம் சொன்னார்கள். "நக்கீரன்' பிரகாஷ், "ஜூனியர் விகடன்' பாரதி தமிழன், "குமுதம்' ஏகலைவன், "தமிழா தமிழா' பாண்டியன் ஆகியோரோடு பேசிக்கொண்டிருந்த நான் உடனடியாக பிரச்சனை நடந்த இடத்துக்குப் போனேன். அங்கு "டைம்ஸ் நவ்' செய்தியாளர் தன்யா ராஜேந்திரன் உள்ளிட்ட ஆங்கில ஊடகவியலாளர்களை சிலர் விரட்டிக் கொண்டிருந்தனர்.

"ஈழ விடுதலைக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் செய்திகள் ஒளிபரப்புவதாக' சொல்லித்தான் அவர்களை விரட்டினர். இந்த வேலையைச் செய்தது மாணவர்கள் அல்ல. மாணவர்கள் பெயரில் ரவுடித்தனம் செய்த சில பேர்வழிகள். நான், ஏகலைவன், தமிழா தமிழா பாண்டியன் ஆகியோர் சேர்ந்து ரவுடித்தனம் செய்தவர்களிடம் பேசி சமரசம் செய்தோம். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்சனைகள் வந்தவண்ணமே இருந்தன. தி.மு.க. மாவட்டச் செயலாளர் வி.எஸ். பாபுகூட இப்படித்தான் விரட்டப்பட்டார்.

இப்படியான சூழலில்தான் முத்துக்குமாரின் வித்துடலை எடுத்துச் செல்வதற்கான பணிகள் நடந்தன. தலைவர்கள் வீரவணக்க உரை நிகழ்த்தினர். புலிக்கொடி போர்த்தி முத்துக்குமார் உடல் சுமந்த வாகனம் நகர்ந்தது. அப்போது வண்டியில் ஏறிநின்ற இயக்குநர் அமீர் அவர்களின் காலைப் பிடித்துச் சிலர் கீழே இழுத்தனர்.
""மாணவர்கள் மட்டுமே ஏற வேண்டும். ஏனென்றால் மாணவர்களிடம்தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று முத்துக்குமாரின் மரண வாக்குமூலத்தில் இருக்கிறது'' என்று ஒருவர் கத்தினார். அவருக்கு ஏறக்குறைய 40 வயது இருக்கும். அவர் மாணவராம்! பின்னர் அமீர் இறங்கிவிட்டார். அப்போது மாலை 6 மணியாகிவிட்டது.

இந்நிலையில், நான் ஏற்கனவே அறிந்திருந்த சிலர், திடீரென மாணவர்கள் என்கிற போர்வையில், புரசைவாக்கம் கடைவீதிகள் வழியாகத்தான் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று வண்டியை மறித்துச் சாலை மறியல் செய்தனர்.

மாலை 4 மணியளவில் கொளத்தூர் தொடங்கிய ஊர்வலம் மூலக்கொத்தளம் இடுகாட்டைச் சென்றடைந்தபோது நள்ளிரவு 12 மணி. தலைவர்கள் பழ. நெடுமாறன், நல்லக்கண்ணு போன்றவர்கள் நடக்க முடியாமல் வாகனங்களில் வந்தனர். எமது தலைவர் எழுச்சித் தமிழரும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் கடைசிவரை நடந்து வந்தனர். புரசைவாக்கம் கடைவீதி வழியாகச் சென்றால் 5 மணி நேரம் கூடுதலாக நடக்க வேண்டியிருக்கும். முத்துக்குமாரின் வித்துடல் விடியற்காலைதான் மூலக்கொத்தளம் போய்ச் சேரும். மேலும், வந்திருந்த பெண்களும் தோழர்களும் சோர்வடைய நேரும். ஆதலால்தான் எமது தலைவர் புரசைவாக்கம் பகுதிக்குள் போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மக்களுடைய சிரமங்களையும் கணக்கிலெடுப்பவர்தான் நல்ல தலைவராக முடியும். அந்த வகையில் மக்கள் தலைவரான எங்கள் தலைவர் அந்த நேரத்தில் அப்படி வேண்டுகோள் வைத்தார். புரசைவாக்கம் வீதிகள் வழியாக முத்துக்குமார் வித்துடலைக் கொண்டு சென்றால்தான் தமிழகத்தில் எழுச்சி ஏற்படுமா? அப்பகுதிகளில் மட்டும்தான் தமிழர்கள் வசிக்கிறார்களா?

கரும்புலி முத்துக்குமாரின் வித்துடலை போகவிடாமல் மறித்து நடுரோட்டில் போட்டால்தான் கல்லூரிகளும் விடுதிகளும் திறப்பார்கள் என்கிற மலிவான "பிளாக் மெயில்' அரசியலுக்காகவா கரும்புலி முத்துக்குமார் மாய்ந்தான்? அன்று முத்துக்குமாரின் வித்துடல் வாகனத்தை எந்தக் கல்லூரி மாணவர்கள் மறித்தார்கள்? குங்குமம் செய்தியாளராக இருக்கும் எனது நண்பர் தோழர் அருள் எழிலன் எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்? அவரும் சாலை மறியலில் உட்கார்ந்து இருந்தாரே!

தலைவர்கள் பழ. நெடுமாறன், வைகோ, த. வெள்ளையன், நல்லக்கண்ணு ஆகியோரோடு எங்கள் தலைவர் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் காத்திருக்கின்றார். அப்போது ""யாரோ தகராறு செய்கிறார்கள். முத்துக்குமாரைச் சுமந்துவரும் வண்டி நடுரோட்டிலேயே நிற்கிறது'' என்று சொன்னபோது, அண்ணன் வைகோ அவர்களும் எங்கள் தலைவரும் ஒரு சேர, ""இது தவறானது. உடனே போய் வாகனத்தை இழுத்து வாருங்கள்'' என்று சொன்னபோது நானும் தோழர்களும் அங்கே போய் சொல்லிப்பார்த்தோம். யாரும் எழுவதாகத் தெரியவில்லை. இயக்குநர்கள் சேரன், ராம் ஆகியோர் கெஞ்சிப் பார்த்தார்கள். மறியலில் ஈடுபட்டோர் எழவில்லை. கல்லூரிகளைத் திறந்தால்தான் நாங்கள் எழுவோம்'' என்றார்கள்.

அப்போது நான், ""இப்படி நடுரோட்டில் உட்கார்ந்து அரசியல் பண்ணுவது சரியா? நாம் எல்லோருமே அமைதியாக முத்துக்குமாரை எரியூட்டிய பின், கோபாலபுரத்தையோ அறிவாலயத்தையோ முற்றுகையிடுவோம் அதற்கு நீங்கள் தயாரா?'' என்று கேட்டேன். ஆனால் யாரும் அதற்கு பதில் சொல்லாமல், ""கல்லூரிகளை உடனே திறந்தால்தான் நாங்கள் எழுந்திருப்போம்'' என்று மீண்டும் மீண்டும் கத்த அடம்பிடித்தனர்.

அரசு எந்திரத்தின் யதார்த்ததைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அவர்களிடம் என்ன பேசி என்ன பயன்? ஆகவே, வண்டியை மறித்து நின்றவர்களை அப்புறப்படுத்தினேன். மூலக்கொத்தளத்தில் காத்திருந்த தலைவர்கள் வீரவணக்கம் செலுத்திய பின் முத்துக்குமாரின் வித்துடல் எரியூட்டப்பட்டது. இதுதான் நடந்தது. ஆனால் அவதூறுகளைச் சாதாரணமாகப் பரப்புகிறார்கள்.

கரும்புலி முத்துக்குமாரின் வீரமரணம் எதைக் காட்டுகிறது? அவரது மரண சாசனத்தின் உள்ளடக்கம் என்ன? மரணிக்கும் தறுவாயில், ""பிரபாகரனிடத்திலும் திருமாவளவனிடத்திலும் சொல்லுங்கள் என்று சொன்னானே முத்துக்குமார், அதன் அர்த்தம் என்ன? எதுவுமே தெரியாமல் விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் குறிவைத்து அவதூறு நெருப்பைப் பற்ற வைக்கிறார்களே என்ன காரணம்?

நடந்ததை மறைத்து, வடிகட்டிய பொய்யைத் துணிச்சலாக எழுதுவதற்கான பின்னணி என்ன? இதைப் பற்றிச் சொல்லித்தான் தீர வேண்டும்.

இன்றைக்கு திராவிட அரசியலுக்கு மாற்றாய் வளர்த்தெடுக்கப்படுகிற அரசியல் தமிழ்த்தேசிய அரசியல்தான். இந்த அரசியலை முழுவீச்சாய் பரப்பி வருபவர் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்தான். ஊருக்கு வெளியே இருந்த சேரி மக்களை பொதுத்தளத்திற்குக் கொண்டு வந்ததோடு, பொதுத் தளத்திலும் அதிகாரப் பங்கீட்டு யுத்தம் நடத்தி வருபவரும் எங்கள் தலைவர்தான். அதிகார மையத்திலிருப்பவர்களுக்கு இவையயல்லாம் எரிச்சலாகத்தான் இருக்கும்.

கரும்புலி முத்துக்குமாரின் வித்துடல் எரியூட்டப்படுவது தொடர்பாகவும் எங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் முடிவு செய்தது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்தான். இந்த இயக்கத்தில் எங்கள் தலைவர் மட்டுமல்லாமல் தா.பாண்டியன், வைகோ, நெடுமாறன், இராமதாசு ஆகியோரும் அங்கம் வகித்தார்கள். எங்கள் தலைவரின் முடிவாக எதுவுமே இல்லை.

எதனையும் எங்கள் தலைவரால் கருத்தாகத் தெரிவிக்க முடிந்ததே தவிர, முடிவாக எடுக்க முடியவில்லை. அதற்கு ஒரு உதாரணம், "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்று பெயர் வைப்பதற்கு முன், "ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்றுதான் வைக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழர் கூறினார். ஆனால், இராமதாசும், நெடுமாறனும் ""அப்படிப் பெயர்வைத்தால் கம்யூனிஸ்டுகள் வருவதற்கு யோசிப்பார்கள்!'' என்று கூறியதால் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' உருவானது. இதனை எத்தனை பேர் விமர்சனம் செய்தார்கள்.

எங்கள் தலைவர் மறைமலை நகரில் சாகும்வரை உண்ணாநிலை தொடங்கிய சனவரி 15ஆம் தேதி முதலே, விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் முழுக்க சாலை மறியல்களில் ஈடுபட்டு, 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்களே. அப்போது சிறுத்தைகளைத் தவிர யாராவது போராட்டத்தில் ஈடுபட்டார்களா?

உண்ணாநிலைப் போராட்டத்தின் இறுதி நாளன்று எழுச்சித் தமிழர் பேசும்போது, தமிழகத்தில் ""காங்கிரசை புல்பூண்டு இல்லாமல் ஆக்குவோம் என்று பேசியதை, மறுநாள் இராமதாசு கண்டித்தாரே! இதற்காக அவரை யாரேனும் கண்டித்தார்களா?

முத்துக்குமார் வீரச்சாவைத் தழுவியபோது விடுதலைச் சிறுத்தைகள், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்று தமிழக அரசுக்கு எதிராக முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஈழத் தமிழர் சிக்கலில், எங்கள் தலைவர் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசுக் கட்சிகளை நேர்மையாகவும் துணிவாகவும் விமர்சனம் செய்துதான் பேசினார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் மற்ற தலைவர்கள், கலைஞரை மட்டுமே வசைபாடிக் கொண்டிருந்தது ஏன்? எல்லா தலைவர்களும் சேர்ந்து தங்கள் கோரிக்கைக்காக முதல்வர் கலைஞரைச் சந்தித்து நெருக்கடி கொடுத்திருக்கலாமே! அதை ஏன் செய்யவில்லை?

ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டக் களத்தில் சனவரி மாதம் மட்டும் விடுதலைச் சிறுத்தைகள் 316 பேர் சிறைப்படுத்தப்பட்டார்கள். சிறுத்தைகள் அல்லாத தமிழ்த் தேசியவாதிகள் எத்தனை பேர் இப்படிக் கொத்துக் கொத்தாய்ச் சிறைக்குப் போனார்கள்? பால்ரஸ் குண்டுகள் கடத்தலிலும், புலிகளுக்கு எரிபொருள் கடத்திய வழக்கிலும் சிறுத்தைகள் கைது என்று செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். அப்போதுகூட உங்களுக்கு நெஞ்சறுக்கவில்லையா? நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று. இப்படி எதையுமே செய்யாதவர்கள் ஆற்றாமையினால் பொய்யையும் புரட்டையும் பேசுவதும் எழுதுவதும் ஏன்?

ஈழத்தமிழர்களின் ஒரே நம்பிக்கை என்று சொல்லப்பட்ட "ஈழத் தாய்' ஜெயலலிதா, இப்போது காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியைச் சந்தித்துப் பேசியது ஏன்?

கரும்புலி முத்துக்குமார் வீரச்சாவடைந்து ஓராண்டாகியுள்ளது. இப்போதுகூட ஒரு வீரவணக்க அஞ்சலி செலுத்த முன்வராத ஜெயலலிதாதான் ஈழத் தமிழர்களின் நம்பிக்கைத் தாயா? தேர்தல் அரசியலுக்காக யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையை வெளியிட்டுத் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா ஈழ ஆதரவாளரா? 25 ஆண்டுகள் ஈழ விடுதலைக்காகத் தன்னை ஒப்புவித்த எங்கள் தலைவர் துரோகியா? தேர்தல் முடிந்த மறுநாளிலிருந்து ஜெயலலிதா ஈழம் குறித்துப் பேசமாட்டார் என்று எங்கள் தலைவர் எழுச்சித் தமிழர் சொன்னது இன்று உண்மையாகவுள்ளது
'"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றவர்கள். இப்போது என்ன சொல்லப் போகின்றனர்?

தேர்தல் அரசியலில் எந்தக் கூட்டணியில் இருப்பது என்பது அந்தந்தக் கட்சி சுயமாக முடிவெடுப்பது. இந்தக் கூட்டணியில்தான் இருக்க வேண்டும் என்பது கருத்தைத் திணிக்கும் ஆதிக்கவெறிப் போக்கு அல்லவா?

எந்தத் திணிப்பும் வன்முறையாகாதா? தலித்துகள் என்றால், ""சமூகத் தளத்தில் மட்டுமல்ல, அரசியல் தளத்திலும் நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்'' என்பது ஆதிக்க வெறியன்றி வேறென்ன?

இன்றைக்கு தமிழ்த் தேசியத் தளத்திற்குள் சில புல்லுருவிகள் நுழைந்து, தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க நினைக்கும் "இராவணன்' மாதிரி ஆட்கள், ஒரு முத்துக்குமார் மட்டுமல்ல, 19 போராளிகள் தீக்குளித்து வீரச்சாவை அடைந்தபோது என்ன புடுங்கினார்கள்? எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடாமல், எழுச்சியை முடக்கியதாகச் சிறுத்தைகள் தலைவர் மீது குற்றம் சுமத்திவிட்டு சினிமா தியேட்டர்களில் சுற்றுகிறார்களே, இதுதான் எழுச்சியா?

- வன்னி அரசு

சேரியிலே இருக்கிறவன் எல்லோரும் விடுதலைபுலியாக மாறியிருக்கிறான் இதை மாத்தியவன் திருமாவளவன்_கரும்புலி முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர்


கடந்த ஆண்டு ஈழத்தில் சிங்கள இராணுவத்தினர் அப்பாவி ஈழ‌தமிழர்களை அழித்தொழித்து கொண்டிருந்தது அதனை தடுத்து நிறுத்த வழியுருத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கடந்த ஓன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் செய்திடாத தொடர்போராட்டங்களை நடத்தியது .ஆனால் அங்கு போர் உச்சக்கட்ட நிலையை அடைந்தது
பல்லாயிரக்கணக்காண தமிழ்சொந்தங்களை ஆழித்தோழித்தனார். சிங்கள அரசுக்கு துணைபோகும் இந்திய அரசை கண்டிக்கும் விதமாகவும் இந்திய அரசு சிங்கள அரசுக்கு செய்த‌ஆயுத உதவியை திரும்ப பெற‌ வழியிருத்தியும்,போரை முற்றிலும் தடுத்து நிறுத்த வழியிருத்தியும் எழுச்சித்தமிழர் அவர்கள் உண்மையாக தன் உயிரையே ஆயுதமாக மாற்றி 4 நாள் உண்ணாநிலை அரப்போராட்டம் மேற்கொண்டார் அதன் எதிரொலியாக தமிழகத்து கரும்புலி முத்துக்குமார் அவர்கள் ஈழத்தில் போரை தடுத்து நிறுத்தவழியுருத்தி கடந்த ஆண்டு சனவரி 29 ஆம் நாளில் மனம் திறந்து மடலை எழுதிவைத்து தன் உடலை தீ வைத்து எரித்துக்கொண்டார்.அதன் தொடர்ச்சியாக முத்துக்குமார் உள்பட 17 பேர் ஈழத்தமிழர்களுக்காக தன் உயிரை மாய்த்துகொண்டார்கள் .அவர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் 29/1/2010 அன்று சென்னை வடபகுதிலுள்ள மிண்ட் என்னும் இடத்தில் தமிழகத்து கரும்புலி முத்துக்குமார் உள்பட அனைத்து போராளிகளுக்கும் வீரவணக்க செலுத்தும் வகையில் மாபெரும் வீரவணக்க பொதுக்கூட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைநிலை அமைப்புகளின் ஒன்றான தமிழ் தேசிய விடுதலை பேரவை சார்பாக எழுச்சியோடு நடைப்பெற்றது.காஞ்சிபுரம் ,திருவள்ளூர்,கடலூர் ,வேலூர் ,மதுரை,சென்னை,விழுப்புரம் ,நெல்லை,அரியலூர்,இப்படி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்காண விடுதலைச்சிறுத்தைகள் கலந்துகொண்டனர்.



தமிழகத்துகரும்புலி முத்துக்குமார் அவர்களின் குடும்பத்திற்கு எழுச்சித்தமிழர் அவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக 2 லட்ச ரூபாய் வழங்கினார் , மேலும் ஆனந்தன் அவர்களின் குடும்பத்திற்கு 1லட்சம் ரூபாயும் , ஈழதமிழர்களுக்காக தன் உயிரை மாய்த்துகொள்ள முயற்சித்த கதிர்வேல் ,எழில்வளவன் ஆகியோருக்கு தலா 25,000 ரூபாய் வழங்கினார்.


எழுச்சித்தமிழர் அவர்கள் கடந்த ஆண்டு ஈழத்தில் போரை தடுத்து நிறுத்த உண்ணாநிலை அரப்போராட்டம் மேற்கொண்டார்.புலம்பெயர்ந்த தமிழர்களும் பல்வேறு நாடுகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் விடுதலைச்சிறுத்தைகள் தோழர்கள் சாலை மறியல் ,ரயில் மறியல்,கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .விடுதலைச்சிறுத்தைகளின் எழுச்சியை பொருத்துகொள்ளாத சாதி வெறி பிடித்த காவல் துறையினர் விடுதலைச்சிறுத்தைகளின் தோழர்கள் மீது பொடா ,குண்டர் தடுப்பு சட்டம் ஆகிய பொய் வழக்குகளை போட்டு உள்ளே தள்ளினர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிறைக்கு சென்ற 26 பேர்க்கும் எழுச்சித்தமிழர் பாராட்டு சான்றிதழ் வழங்கியும் சால்வை அணிவித்தும் கெள‌ரவித்தார் .எழுச்சித்தமிழர் அவர்கள் தமிழகத்து கரும்புலி நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் சுமார் 1.30 மணிநேரம் எழுச்சியுரை ஆற்றினார்.

எழுச்சித்தமிழர் பேசும் பொழுது தமிழகத்து கருப்புலி அவர்கள் தீ வைத்து எரித்துகொண்டபொழுது அவர் மருத்துவனையில் சாகும் தருவாயில் கூட என் மரணத்தை அண்ணண் மேதகு பிரபாகரன் அவர்களிடமும் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களிடமும் சொல்லுங்கள் என்று சொன்னார் முத்துக்குமார் ..
ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டை தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கண்டித்து குரல் கொடுக்கவில்லை ,மனிதாவிமான அடிப்படையில் கூட ஒரு போராட்டம் நடத்தவில்லை .


தேர்தல் வருகிறபோது எல்லோரும் சாதியவாதியாக தான் இருக்கிறார்கள் யாரும் தமிழ்தேசிய வாதியாக இருக்கமாட்டார்கள் .
சேரியிலே இருக்கிறவன் எல்லோரும் விடுதலைபுலியாக மாறியிருக்கிறான் இதை மாத்தியவன் திருமாவளவன் .
உண்மையான தமிழ்தேசியம் சேரியிலே தான் இருக்கிறது என்று கண்ணீர் மல்க 1.30 மணிநேரம் உரையாற்றினார்.

தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர்

சனவரி 25 ஆம் நாள் ஆண்டுதோறும் தாய்மொழி காத்த மொழிபோர் தியாகிகளுக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிபோர் தியாகிகள் நடராசன் ,தாளமுத்து அவர்களின் நினைவிடத்தில் காலை 10 மணிக்கு எழுச்சித்தமிழர் அவர்கள் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் எழுச்சித்தமிழரை பார்த்து கைகுலுக்கி எழுச்சியோடு வரவேற்றனர் .

சென்னையில் காலை 11 மணிக்கு விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள அரங்கநாதன் அவர்களின் மணிமண்டப‌த்தில் எழுச்சித்தமிழர் அவர்கள் மலர்வளையம் வைத்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொண்டர்களோடு வீரவணக்கம் செலுத்தினார்


சென்னையில் பிற்பகல் 1 மணியளவில் இணைப்பு விழா நடைப்பெற்றது இதில் அம்பேத்கர் புரட்சி இயக்கத்தில் உள்ள தோழர்கள் அனைவரும் தங்களை விடுதலைச்சிறுத்தைகளாக இணைத்துகொண்டார்கள் .

இணைப்பு விழாவில் எழுச்சித்தமிழர் உரை பகுதி1

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

இணைப்பு விழாவில் எழுச்சித்தமிழர் உரை பகுதி2

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

இணைப்பு விழாவில் எழுச்சித்தமிழர் உரை பகுதி3

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

இணைப்பு விழாவில் எழுச்சித்தமிழர் உரை பகுதி4

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம்,எழுச்சித்தமிழருக்கு பாராட்டு விழா,பல்வேறு கட்சியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகளாக இணைக்கும் நிகழ்ச்சி ஆகிய மூன்று நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாது. இதனை புதியதாக தன்னை விடுதலைச்சிறுத்தையாய் இணைத்துகொண்ட மீஞ்சூர் செந்தில்குமார் அவர்கள் ஒரு மாநாடு போன்று நடத்த வேண்டும் என எண்ணி கடந்த மூன்று மாதமாக திருவள்ளூர் ,காஞ்சிபுரம்,வேலூர்,சென்னை ஆகிய அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களையும் ஒருங்கிணைத்து களபணிகளை ஆற்றினார்.

திருவள்ளூரில் மீஞ்சூர் செந்தில் குமார் எழுச்சித்தமிழரை வாழ்த்தி நன்றி தெரிவித்தார் பகுதி1

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

திருவள்ளூரில் மீஞ்சூர் செந்தில் குமார் எழுச்சித்தமிழரை வாழ்த்தி நன்றி தெரிவித்தார் பகுதி2

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

அதனை நிறுவிக்கும் விதமாக நடந்த முப்பெரும் விழா மாநாடு போன்று அமைந்தது .அந்தளவிற்கு சென்னை முழுக்க எழுச்சித்தமிழர் அவர்களின் சுவர் விளம்பரங்களும் ,விளம்பர பலகையும் நூற்றுகணக்கிலே வைத்திருந்தனர் .பொதுக்கூட்ட மேடையும் இது வரைக்கும் எந்த முன்னணி கட்சியும் அமைத்திடாத அளவிற்கு பிரம்மாண்டமாக அமைத்திருந்தனர் .பல்லாயிரக்கணக்காக மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் எழுச்சித்தமிழர் அவர்கள் சுமார் 8 மணியளவில் மேடையேறினார்.விடுதலைச்சிறுத்தைகள் அவைவரும் எழுந்து நின்று எழுச்சித்தமிழரை வரவேற்றும் பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .விடுதலைச்சிறுத்தைகள் அனைவரும் கட்டுபாடாகவும் ,கட்டுகோப்பாகவும் இருந்தனர் .எழுச்சித்தமிழர் அவர்கள் முப்பெரும் விழாவில் சுமார் 1.45 மணிநேரம் உரையாற்றினார்.

அவர்கள் உரையாற்றும் பொழுது தாய்தமிழ் காத்த மொழிபொர் தியாகிகளான நடராசன் ,தாளமுத்து ,ராசேந்திரன்,விராலிமலை சண்முகம் ,கீழப்பழுவூர் சின்னசாமி,கோடம்பாக்கம் சிவலிங்கம் ,ஆசிரியர் வீரப்பன் ,விருகம்பாக்கம் அரங்கநாதன்,கீரனூர் முத்து,மயிலாடுத்துறை சாரங்கபாணி ஆகியோருக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கம் செலுத்தினார்.1938 ஆம் ஆண்டில் நடந்தமொழி போராட்டத்தின் போது காவல்துறையால் துன்புறுத்தப்பட்டு இறந்த தமிழ்மொழி காத்த முதல் போராளிகள் நடராசனும் ,தாள முத்துவும் தான்.
1965 ஆம் ஆண்டு அடுத்த கட்ட போராட்டமாக இந்தி திணிப்பை எதிர்த்து 8 பேர் தீக்குளித்தும் ,ந‌ஞ்சு அருந்தியும் தன் இன்னுயிரை தியாகம் செய்தனால்தான் இன்று வரை தமிழ் மொழியின் பெருமை அழியாமல் செழுமையாக இருக்கிறது என்றும்.
தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்.
விடுதலைச்சிறுத்தைகள் தான் உண்மையான தமிழ்தேசிய இயக்கம்
விடுதலைச்சிறுத்தைகள் நூற்றுக்கு நூறு சதவிதம் சுயம்புவாக வளர்ந்துகொண்டிருக்கிறது.தினம் தோறும் தொடர்ந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி விடுதலைச்சிறுத்தைகளாக பலர் இணைத்துகொண்டிருக்கிறார்கள் ஆனால் இதை எந்த ஊடகமும் பதிவு செய்வதில்லை.
பாதிக்கப்பட்ட அனைத்து சமூக மக்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகள் குரல் கொடுக்கும் .
உலகம் முழுவதும் விடுதலை புலிகளுக்கு அடுத்தபடியாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடி பறக்கின்றது, அந்தளவிற்கு மக்கள் அனைவரும் தமிழ் சமூகத்திற்காகவும் .தமிழீழ விடுதலைக்காகவும் உண்மையாக போராடுகின்ற இயக்கமாக விடுதலைச்சிறுத்தைகளை நம்புகின்றனர் என எழுச்சியோடு உரையாற்றினார்.
இறுதியில் மீஞ்சூர் செந்தில்குமாருக்கு இளஞ்சிறுத்தை மாநில துணைச்செயலாளர் பொறுப்பை எழுச்சித்தமிழர் அவர்கள் அந்த மேடையிலே அறிவித்து விடைப்பெற்றார்.

தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர் பகுதி1

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர் பகுதி2

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர் பகுதி3

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர் பகுதி4

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர் பகுதி5

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர் பகுதி6

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர் பகுதி7

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர் பகுதி8

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர் பகுதி9

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

பாடல் /நிறுத்த‌

சிறுபான்மை சமூகத்திற்காக விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுக்கும்_எழுச்சித்தமிழர்

சிறுபான்மை பள்ளிகளுக்கு 20 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுவரும் அரசு நிதியுதவியை உடனே வழங்கக்கோரி சென்னையில் 23/1/2010 அன்று மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது .இதில் எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்துகொண்டு அவர்கள் போராட்டம் வெற்றிபெரும் வரை விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுக்கும் மேலும் தமிழக முதல்வர் அவர்களிடமும் தங்களின் கோரிக்கையை முன்வைப்பேன் என எழுச்சித்தமிழர் பேசினர்

சிறுபான்மை சமூகத்திற்காக விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுக்கும்_எழுச்சித்தமிழர் பகுதி1

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

சிறுபான்மை சமூகத்திற்காக விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுக்கும்_எழுச்சித்தமிழர் பகுதி2

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

வேலூரில் எழுச்சித்தமிழர் உள்பட‌ சுமார் 5000க்கு மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது

வேலூரில் 20/1/2010 அன்று காலை 11 மணியளவில் அனுமதி மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் மசூதி நுழைவுப்போராட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைநிலை அமைப்பான இசுலாமிய சனநாயகப்பேரவை சார்பாக நடைபெற்றது





வேலூரில் பிரம்மாண்டமான கோட்டைக்குள் அமைந்துள்ள மசூதி 1750_ல் நிர்மாணிக்கபட்டதாகும் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்த மசூதி தற்போது இந்திய தொல் பொருள் துறையின் கட்டுபாட்டின் கீழ் இருந்து வருகின்றது.தற்போது இந்த மசூதியில் தொழுகைக்கு அனுமதிப்பதில்லை நுழைவாயில் மூடப்பட்டுள்ளது இதனை கண்டித்து மாபெரும் போராட்டத்திற்கு எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமை தாங்கினார் .வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் துறை கட்டுபாட்டில் இருந்தது அந்தளவிற்கு விடுதலை சிறுத்தைகள் எழுச்சியோடு போராட்டத்தை நடத்தினர் .பல்லாயிரகணக்கான இசுலாமியர்கள் கலந்துகொண்டனர்.எந்த ஒரு அரசியல் கட்சியும் ,இசுமாமிய இயக்கங்களும் நடத்திடாதா மசூதி நுழைவு போராட்டம் விடுதலை சிறுத்தைகளால் நடத்தப்பட்டு எழுச்சித்தமிழர் உள்பட‌ சுமார் 5000க்கு மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர் .இந்த செய்தி அறிந்து தமிழகம் முழுவதும் விடுதலைச்சிறுத்தைகள் மறியலில் ஈடுபட்டு காவல் துறையினரால் கைது செய்யபட்டார்கள் .

வேலூர் கோட்டை மசூதியில் தொழுகை நடத்தும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குடல் கொடுக்கும் _எழுச்சித்தமிழர் பகுதி1

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

வேலூர் கோட்டை மசூதியில் தொழுகை நடத்தும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குர‌ல் கொடுக்கும் _எழுச்சித்தமிழர் பகுதி2

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

வேலூர் கோட்டை மசூதியில் தொழுகை நடத்தும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குர‌ல் கொடுக்கும் _எழுச்சித்தமிழர் பகுதி3

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

வேலூர் கோட்டை மசூதியில் தொழுகை நடத்தும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குர‌ல் கொடுக்கும் _எழுச்சித்தமிழர் பகுதி4

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

வேலூர் கோட்டை மசூதியில் தொழுகை நடத்தும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குர‌ல் கொடுக்கும் _எழுச்சித்தமிழர் பகுதி5

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

வேலூர் கோட்டை மசூதியில் தொழுகை நடத்தும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குர‌ல் கொடுக்கும் _எழுச்சித்தமிழர் பகுதி6

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

வேலூர் கோட்டை மசூதியில் தொழுகை நடத்தும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து குர‌ல் கொடுக்கும் _எழுச்சித்தமிழர் பகுதி7

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

எழுச்சித்தமிழர் கோட்டை மசூதிக்குள் நுழையும் போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட காணொளி

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாட்களை தொழிலாளர் விடுதலைக்கு முழுமையாக பாடுபட்ட மாமனிதர் திருவள்ளூரில் எழுச்சித்தமிழர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 19/1/2010 அன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணை நிலை அமைப்புகளின் ஒன்றான தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக எழுச்சித்தமிழர் அவர்கள் ஆவடி மற்றும் அம்பத்தூரில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியை ஏற்றியும் ,தொழிலாளர் விடுதலை முன்னணி பேர் பலகையையும் திறந்து வைத்தார், மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழில் சங்கங்கள் சில தன்னை தொழிலாளர் விடுதலை முன்னணியில் இணைத்துகொண்டனர் .அவர்களை அனைவரையும் வாழ்த்தி சுமார் 40 நிமிடம் எழுச்சித்தமிழர் அவர்கள்உரையாற்றினார்

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாட்களை தொழிலாளர் விடுதலைக்கு முழுமையாக பாடுபட்ட மாமனிதர் திருவள்ளூரில் எழுச்சித்தமிழர் பகுதி1

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாட்களை தொழிலாளர் விடுதலைக்கு முழுமையாக பாடுபட்ட மாமனிதர் திருவள்ளூரில் எழுச்சித்தமிழர் பகுதி2

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாட்களை தொழிலாளர் விடுதலைக்கு முழுமையாக பாடுபட்ட மாமனிதர் திருவள்ளூரில் எழுச்சித்தமிழர் பகுதி3

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாட்களை தொழிலாளர் விடுதலைக்கு முழுமையாக பாடுபட்ட மாமனிதர் திருவள்ளூரில் எழுச்சித்தமிழர் பகுதி4

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாட்களை தொழிலாளர் விடுதலைக்கு முழுமையாக பாடுபட்ட மாமனிதர் திருவள்ளூரில் எழுச்சித்தமிழர் பகுதி5

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாட்களை தொழிலாளர் விடுதலைக்கு முழுமையாக பாடுபட்ட மாமனிதர் திருவள்ளூரில் எழுச்சித்தமிழர் பகுதி6

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாட்களை தொழிலாளர் விடுதலைக்கு முழுமையாக பாடுபட்ட மாமனிதர் திருவள்ளூரில் எழுச்சித்தமிழர் பகுதி7

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

சென்னையில் எழுச்சித்தமிழர் அவர்கள் தோழர் ஜோதிபாசுவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்

சென்னையில் 19/1/2010 அன்று தி.நகரில் அமைந்துள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் எழுச்சித்தமிழர் அவர்கள் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் முதுபெரும் தலைவர், புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளர் தோழர் ஜோதிபாசுவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்

சென்னையில் எழுச்சித்தமிழர் அவர்கள் தோழர் ஜோதிபாசுவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து செய்தியாளரிடம் பேசினார்

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

முதுபெரும் தலைவர் ஜோதிபாசு மறைவு
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்கு மட்டுமின்றி
சனநாயக அரசியலுக்கும் பேரிழப்பு

- தொல். திருமாவளவன் இரங்கல்

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் முதுபெரும் தலைவர், புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளர் தோழர் ஜோதிபாசுவின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பிய அவர், இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டங்களைத் தலைமையேற்று வழிநடத்தியவர். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான சிஐடியுவை உருவாக்கி வளர்த்ததில் அவருடைய பங்கு மகத்தானது. ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவராக இருந்தாலும் அனைத்துத் தரப்பினராலும் மதிக்கத்தக்க பெருமைக்குரியவராக விளங்கினார். இரண்டுமுறை பிரதமராகக்கூடிய வாய்ப்புக் கிடைத்தபோதிலும் அதனை விரும்பியேற்காமல் மேற்குவங்கத்தின் வளர்ச்சியிலேயே அதிகம் அக்கறை காட்டினார். அதனால் தீவிர அரசியலில் இருந்தபோது எவராலும் அசைக்கமுடியாத பெரும் சக்தியாக விளங்கினார். இந்திய மண்சார்ந்த பொதுவுடைமை அரசியலுக்கு அவர்தான் முன்னோடியாக விளங்கினார்.

தோழர் ஜோதிபாசுவின் மறைவு இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்கு மட்டுமின்றி சனநாயக அரசியலுக்கும் பேரிழப்பாகும். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் செம்மாந்த வீரவணக்கம் செலுத்துகிறது.

இவண்

தொல். திருமாவளவன்

[அமரர் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வில் எழுச்சித்தமிழர் அவர்களின் எழுச்சிமிகு உரை]

[கணவரின் சடலத்துக்கு அருகே கதறிய பிரபாகரன் தாய் ''தம்பி உயிரோடு இருக்கிறார்... கனடாவில் என்னை சந்திப்பார்!'' எழுச்சித்தமிழர் அவர்கள் ஜீனியர் விகடனுக்கு அளித்த பேட்டி]

[எழுச்சித்தமிழர் அவர்கள் ஐ.நா சபையில் ஆற்றிய உரை ]

[இலங்கை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிள்ள தமிழ்ச்சொந்தங்களை எழுச்சித்தமிழர் சந்தித்தக்காட்சிகள்.]

இலங்கை பயணம்‍ ‍ : எழுச்சித்தமிழரின் சிறப்பு நேர்காணல்.

நேர்காணல் பகுதி 1: இந்தப்பயணத்தின் நோக்கம் நிறைவேறும் - எழுச்சித்தமிழர்

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

நேர்காணலின் பிற பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்]

thiruma.netக்காக எழுச்சித்தமிழரின் சிறப்பு உரையாடல்

லண்டனில் கண்டன‌ங்கள் எழுந்ததாக வந்த‌ ஜூனியர் விகடன் செய்தி‍க்கு எழுச்சித்தமிழர் மறுப்பு. மேலும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் தன்னுடன் பேசியதாக வந்த தகவல் தவறானது என்றார்.

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

லண்டன் பயணம்‍ பற்றி thiruma.netக்காக எழுச்சித்தமிழரின் சிறப்பு உரையாடல்

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு

மாவீரர் நாளில் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஈழத்தின் கொடுமைகளை உலகுக்கு எடுத்துகாட்டுவதற்காக எழுச்சித்தமிழர் ஒளிப்பதிவு செய்த " வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு .

சென்னையில் 27/11/2009, இன்று தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைக்காக போராடி தன் இன்னுயிர்களை தியாகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் மாவீரர் நாள் என இந்நாள் போற்றப்படுகிறது.இந்த ஆண்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரான எழுச்சித்தமிழர் அவர்களை எழுச்சி உரை ஆற்ற ஐரோப்பா கண்டத்தில் உள்ள டென்மார்க் என்ற நாட்டிற்கு அழைக்கப்பட்டார் .சில முக்கிய காரணங்களால் அந்த பயணத்தை தவிர்க்கவேண்டியிருந்தது . எழுச்சித்தமிழர் அவர்கள் கடந்த மாதம் அக்டோபர் 10 முதல் 14 ஆம் தேதி வரையில் இலங்கைக்கு சென்று,அங்கு வதை முகாமில் சிக்கிதவிக்கும் மக்களின் அவலங்களையும் ,கொடுமைகளையும் நேரில் பார்த்து உலகிற்கு எடுத்துரைப்பதற்காக 10 பேர் கொண்ட குழுவில் ஒருவராக சென்றார் .புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் அனைவரது எதிர்பார்ப்பு திருமாவளவன் ஈழமக்களின் நிலைகுறித்து என்ன சொல்லபொகிறார் என்பதாக இருந்தது.ஆனால் இங்கு இருக்கும் சாதிய‌ அர‌சியல்வாதிகள் எழுச்சித்த‌மிழ‌ர் எதை செய்தாலும் விம‌ர்ச‌ன‌ம் செய்துகொண்டுயிருக்கிறார்க‌ள் . எழுச்சித்த‌மிழ‌ர் அவ‌ர்க‌ள் என்னை விமர்சனம் செய்பவர்கள் ஈழஆதரவாளர்கள் அல்ல சாதிய அரசியல்வாதிகள் என்று அவர்களது முக‌த்திரை கிழிப்ப‌த‌ற்காகவே ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் கொடுமைக‌ளை வெறும் பேச்சிலும்,எழுத்திலும் சொன்னால் போதாது,வ‌வுனியா முகாமில் ந‌ட‌க்கும் அவ‌ல‌ங்க‌ளை நாம் நேரில் பார்ப்ப‌து போன்று கேம‌ராவில் ஒளிப்ப‌திவு செய்து ,இன்று மாவீர‌ர் தின‌த்த‌ன்று அதை ஓர் ஆவ‌ண‌ ப‌ட‌மாக‌ வெளியீட்டு இருக்கிறார்.அந்த‌ ஆவ‌ண‌ ப‌ட‌த்திற்கு " வத‌க்குறாங்க‌ள‌ய்யா"................. என்று பெய‌ர் சுட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து.

எழுச்சித்தமிழர் ஒளிப்பதிவு செய்த " வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் பகுதி 1

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

எழுச்சித்தமிழர் ஒளிப்பதிவு செய்த " வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் பகுதி2

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

எழுச்சித்தமிழர் ஒளிப்பதிவு செய்த " வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் பகுதி3

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

எழுச்சித்தமிழர் ஒளிப்பதிவு செய்த " வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் பகுதி4

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

எழுச்சித்தமிழர் ஒளிப்பதிவு செய்த " வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் பகுதி5

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

எழுச்சித்தமிழர் ஒளிப்பதிவு செய்த " வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் பகுதி6

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

எழுச்சித்தமிழர் ஒளிப்பதிவு செய்த " வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் பகுதி7

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

ஆவணப்படத்தை வெளியிட்டு எழுச்சித்தமிழர் அவர்கள் பேசியதாவது .
இந்த நாள் உலக தமிழர்களால் போற்றப்படுகின்ற ஒர் புனித நாள் .மாவீரர் நாள் மண்ணை காத்த ,மானம் காத்த மகத்தான போராளிகளின் வீரவணக்க நாள் இன்றைய நாளில் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன்.த‌மிழீழதலைவர் மேத‌கு பிரபாக‌ர‌ன் அவ‌ர்க‌ள் முத‌ல் மாவீர‌ர்க‌ள் நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்தும்பொழுது போராளிகளுக்குள் ஒர் ச‌ம‌த்துவ‌ம் தேவை என‌று சொல்லி.எத்த‌னை பேர் க‌ள‌ப்ப‌லி ஆனாலும் அத்த‌னை பேரும் மாவிர‌ர்க‌ள் என்று கூறினார்.த‌மிழீழதலைவர் அவர்கள் போராளிகள் எவ்வளவு பெரிய பொருப்பிலே இருந்தாலும் அவர்கள் அவைவருக்கும் சமமானவர்கள் என்று நடைமுறையிலே காட்டுவதற்காகதான் இந்த ஒர் நாளை மாவீரர் நாளாக அறிவிக்கிறேன் என்று பிரகடனப்படுத்தினார். தமிழீழ போராட்ட களத்திலே முதல் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்த நாள் நவம்பர் 27 ஆம் தேதி.முதல் புலி சங்கர் நினைவுநாள் தான் நவம்பர் 27

தமிழீழ தலைவர் தலைமை பொருப்பு ஏற்ற பொழுது அவருக்கு வயது 17 அல்லது 18 இருக்கும் அப்பொழுது புதிய புலிகள் என்று தான் பெயர் .அதன் பிறகு தமிழீழ விடுதலை புலிகள் என மாற்றபட்டது.

தமிழீழ தலைவர் அவர்கள் 30வது வயதில் உலகம் அறிந்த ஓர் மாபெரும் படைத்தலைவராக பொருப்பில் இருந்தபொழுது களப்பலியாகிற ஒவ்வொருவரையும் வரலாற்றிலே பதிவு செய்ய வேண்டும் .அவர்களுக்குரிய மதிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்.ஒவ்வொரு ஆண்டும் தமிழீழ தலைவர் ஆற்றுகிற மாவீரர் நாள் உரை எதிரிகளால் கவனிக்கப்பட்டது. அப்படி 1989 லே தொடங்கி 2008 வரையில் ஒவ்வொரு மாவீரர் நாளிலும் அவர் உலகம் புகழ் பெற்ற உரையாற்றுவார்.

இன்று உலகமே எதிர்பார்த்தது தமிழீழ தலைவர் எங்கோ ஓர் இடத்தில் இருந்து தமிழ் இனத்திற்கு ஓர் செய்திதரபோகிறார் உரையாற்ற போகிறார் என்ற‌ எதிர்பார்ப்பு உலகமெங்கும் பரவியிருந்தது

1989 இருந்து 2008 வரை ஆற்றிய உரைகள் அவர் கொடுத்த நேர்காணல் இவற்றையெல்லாம் தொகுத்து பார்த்தால் எல்லா விமர்சனங்களுக்கும் அதிலே விடைகிடைக்கும்

.விடுதலை புலிகள் போரில் தோற்க்கவில்லை அது விடுதலை இயக்கம் வெகுமக்கள் இயக்கம் என்பதை நிலைநாட்டுவதிலே தோற்றுபோய்விட்டோம் .

கருத்தியல் அடிப்படையில் தமிழ் தேசிய இனம் ஓர் தனி தேசிய இனம் என்பதை அங்கீகரிக்கவேண்டும் என்பது தான் வ‌ட்டுக்கோட்டை தீர்மானம்

.இந்த மண்ணில்ஓர் விடுதலை போராட்டத்தின் ஆயுதம் வடிவம் தோற்றுபோய்யிருக்கலாம் அடுத்த வடிவம் உயிர் பெற்று இருக்கிறது என்று சொல்லி தன் எழுச்சிமிகு உரையை முடித்துகொண்டார்.எழுச்சித்தமிழர் அவர்கள் சுமார் 1.30 மணிநேரம் பேசினார்.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு விழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 1 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடுவிழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 2 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு விழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 3 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு விழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 4 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு விழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 5 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு விழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 6 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு விழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 7 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு விழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 8 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு விழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 9 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு விழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 10 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

" வதக்குறாங்களய்யா"....... ஆவணப்படம் வெளியீடு விழாவில் எழுச்சித்தமிழர் அவர்களின் உரை பகுதி 11 :

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it.

திருமா மாத இதழ்(ஆசிரியர்: தொல்.திருமாவளவன்)துவக்க விழா.

ஆகத்து 22, மதுரையில் திருமா மாத இதழை துவக்கி வைத்து எழுச்சித்தமிழர் வாழ்த்தினார். இதழின் ஆசிரியர் "எழுச்சித்தமிழர்" தொல்.திருமாவளவன் அவர்கள் முதல் பிரதியை வெளியீட, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆற்றலரசு அவர்கள் பெற்றுக் கொண்டார்.


ஒவ்வொரு மாதமும் தலைவரின் உரை மற்றும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளையும், சமூக நிகழ்வுகளையும் தாங்கி வரும் வகையில் திருமா மாத இதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இதழ் திருமா இணையம்(www.thiruma.net ) சார்பில் வெளீயிடப் பட்டுள்ளது.

இதழ் சம்பந்தமான தொடர்புக்கு:

பா.அகரன் (9841178241)
த.முதல்வன் (9176123167)